Thursday, March 25, 2010

சதுரகிரி மலை


சதுரகிரி மலை - சித்தர் பூமிசதுரகிரி மலை, அது இறைவனின் இருப்பிடம். இந்த மலை பல விதமாக அழைக்கப்படுகிறது. சதுராசலம், மகாலிங்கம் மலை, கோரக்கர் மலை, பூலோககைலாயம், தென்கைலாயம், சதுர் வேத கிரி. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் உள்ளது. சரியான பாதை கிடையாது, அடிவாரத்திலிருந்து மலை ஏறுகிற வழி மட்டும் தான்.

மலை ஏறுபவர்கள் பன்னிரண்டு கிலோ மீட்டர் காட்டின் வழியாக நடந்துதான் செல்லவேண்டும். மூன்று இடங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. சித்தர்கள், இன்றும் இம்மலையில் ரூபமாகவும்/அரூபமகவும் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு இடத்தில் இரண்டு லிங்கங்கள், ரெட்டை லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இங்கு மின்சாரம் இல்லை, தொலைபேசி இல்லை, செல் போன் வசதி இல்லை, கடைகள் இல்லை, ஹோட்டல் இல்லை, தங்குவதற்கு வசதியான இடம் இல்லை. அடிப்படை வசதிகள் மட்டும் சந்தன மகாலிங்கம் சன்னதியில் செய்து தரப்படுகிறது.

மேலும்விவரங்களுக்கு சதுரகிரி.காம் மையத்தை பார்க்கவும்.மகாலிங்கத்திடம் நேரடியாக பேசுகிற வாய்ப்பை நமக்கு அளிக்கும் மலை இது. வாழ்வின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் இடம். ஒருவருக்குதரப்பட்ட விடை இன்னொருவருக்கு தரப்படமாட்டது. ஆதலினால் அவரவர்நேரடியாக சென்று அனுபவங்களை பெற வேண்டும் என்பது முதல் விதி.அனுபவங்களை உணர்ந்திட எந்த பல்கலைகழகத்திற்கும் சென்று பட்ட படிப்பு படிக்க தேவை இல்லை. கொஞ்சம் பொறுமையும், பக்தியும், ஆழ்ந்தநம்பிக்கையும் அவன் மீது வைத்தால் போதும். .ஆசார அனுஷ்டனங்களுக்கு அப்பார்பட்ட இடம். மானசீக பக்தி ஒன்று மட்டும் போதும்.வருக! வந்து அவன் அருள் பெருக!திருச்சிற்றம்பலம்!

No comments:

Post a Comment