அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிபடையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (techniques) ஆகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். அவதானிக்கப்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அவ்வாதாரங்கள் பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
தற்கால அறிவியல் சூழலில் அறிவைப் பெற, வளர்க்க ஆய்வு முக்கியம். அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்வது ஒரு சிறந்த வழிமுறை. அதைத் தமிழில் செய்ய, தமிழுக்கு ஆயுவுத் திறன் தேவை.எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துப் பயன்படுத்த முடியும்.
--------------------------------------------------------------------------------
Wednesday, May 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment